கனடா சென்ற இலங்கை மாணவன் உயிரிழப்பு!

#SriLanka #Death #Accident
Mayoorikka
2 years ago
கனடா சென்ற இலங்கை மாணவன் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து உயர் கல்விக்காக கனடா சென்ற இலங்கை மாணவன் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்று அமெரிக்காவின் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்ற குறித்த இளைஞன் விபத்துக்குள்ளானார்.

 விபத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்தார். கல்விக்காக கனடா சென்றிருந்த வேளையில் வான்கூவர் நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

 கொட்டாவை தர்மபால கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தரத்தில் சித்தியடைந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.

 அமெரிக்காவின் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது வினோஜ் விபத்துக்குள்ளானார். அவர் இறக்கும் போது கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்திருந்தார்.

 கனடாவின் வான்கூவர் நகருக்கு பிஎச்டி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வழங்குவதற்காக சென்று மீண்டும் திரும்பி வரும் போது சமிக்ஞை பலகைக்கு அருகில் அவரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

 இதன்போது வேகமாக வந்த மேலும் ஒரு கார் வினோஜ் பயணித்த காரின் பின்னால் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வினோஜ் இறந்து 19 நாட்களின் பின்னர் சடலம் நேற்று (11) மத்தேகொடை நந்துன் உயனேயில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், காலி - படபொல - மனாங்கொட மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4