கைமா பரோட்டா, வெஜ் பரோட்டா செய்வது எப்படி?
#Tamil Nadu
#Tamil People
#Recipe
#Cooking
#Food
#Tamil Food
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 4 பரோட்டா
- 2 பெரிய வெங்காயம்
- 2 குட மிளகாய்
- 200 கிராம் கோஸ்
- 2 டீஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 டீஸ்பூன் சோயா சாஸ்
- 3 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
- 3 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு பரோட்டாவையும் நீள நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், மற்றும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கறிகள் பாதி வதங்கியதும் சாஸ் வகைகளை சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கிய பரோட்டா, மிளகுத்தூள், சேர்த்து நன்கு கிளறி சூடேறியதும் இறக்கவும். சுவையான கைமா பரோட்டா தயார்.