IND Vs WI முதலாவது டெஸ்ட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

#Test #India Cricket #Cricket #2023 #match #Tamilnews
Mani
2 years ago
IND Vs WI முதலாவது டெஸ்ட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்காவில் இன்று தொடங்குகிறது.

இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4