நிதி வங்குரோத்த நிலை தொடர்பில் ஆராய தீர்மானம்! 3 மாதங்களுக்குள் அறிக்கை

#SriLanka
Mayoorikka
2 years ago
நிதி வங்குரோத்த நிலை தொடர்பில் ஆராய தீர்மானம்! 3 மாதங்களுக்குள் அறிக்கை

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

 தலவதுகொட பகுதியில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடன் பெறாமல் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் எந்த புதிய திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை. மாறாக கடன் பெற்று தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

 நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. குழு ஒருமுறையேனும் கூடவில்லை.ஆனால் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளார்கள். சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. 

நிதி முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கடன் ஸ்திரப்படுத்தல் தொடர்பில் துறைசார் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கோப் குழு தீர்மானித்தது,நான் அப்போதைய கோப்குழுவின் தலைவராக பதவி வகித்தேன். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார்.ரணில் விக்கிரமசிங்க 2022.07.20 ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

2022.07.22 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் அனைத்தும் செயலிழந்தன. நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு அவதானம் செலுத்தியவர்கள் தற்போதைய கோப் குழுவுக்குள் உள்வாங்கப்படவில்லை.2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தவறான தீர்மானங்கள் தொடர்பில் கணக்காளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்போது செயற்பட வேண்டும். நிதி வங்குரோத்த நிலை தொடர்பில் ஆராய தீர்மானித்துள்ளோம்.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதற்கான பணிகளை நாளை மறுதினம் (15) திகதி முதல் முன்னெடுப்போம்.

2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலங்களை உள்ளடக்கிய வகையில் விசாரணைகளை முன்னெடுப்போம்.நிதி நிலைமை தொடர்பில் இன்னும் 03 மாதகாலத்துக்குள் மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4