அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த முறையான வழிமுறைகள் அறிமுகப்படுத்த முடிவு

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த முறையான வழிமுறைகள் அறிமுகப்படுத்த முடிவு

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரசாங்க செலவீனத்தில் இடம்பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 பொதுமக்களின் வருமானத்தை மறந்துவிடுவது மாத்திரமன்றி, எந்தவொரு பயனும் இல்லாத செயற்பாடுகளுக்காக பொதுமக்களின் பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவதே இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 புதிய அரச வருமானத்தை உருவாக்குவதற்கான உத்திகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4