ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

#SriLanka #Death #Police
Prathees
2 years ago
ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில்  ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் -கொழும்பு மற்றும் கண்டி பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 பேருந்து நிலையத்தினுள் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பேரூந்து நிலையத்திற்கு வந்த பயணியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்த நபர் நேற்று பிற்பகல் முதல் சுற்றித் திரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4