திருக்கை மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்:
1/2 Kg திருக்கை மீன்
15 சின்ன வெங்காயம்
2 தக்காளி
20 பூண்டு
2 tsp எலுமிச்சை சாறு
5 tsp தேங்காய் எண்ணெய்
1 tsp வெந்தயம்
1/2 tsp மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
அரைத்து வைக்க:
5 tsp மிளகு
4 tsp மல்லித்தூள்
5 tsp தேங்காய் துருவல்
செய்முறை:
மிளகு,மல்லித்தூள்,தேங்காய் போன்ற அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதை புளிக்கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம், உரித்த பூண்டு, போட்டு சின்ன வெங்காயம், உரித்த பூண்டு, போட்டு வதக்கவும்.
பின் வெவங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கி வந்தவுடன் அதில் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மென்மையாக வதங்கி வந்தவுடன்.
அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நன்கு கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான துண்டுகளைச் கொதிக்க விடுங்கள்.
அதன் பின் குழம்பு நன்கு கொதித்து வந்ததும் எலுமிச்சை பழ சாறு சேர்த்து, இறக்கிப் பரிமாறவும். அவ்வளவு தான் திருக்கை மீன் குழம்பு தயார்.