18 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

#SriLanka #Employees #Lanka4
Thamilini
2 years ago
18 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!

டெங்கு ஒழிப்புப் பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தற்காலிக்க ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நேற்று (19.07) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது தொடர்ந்து கருத்த தெரிவித்த அவர்,  “சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார். 

இவ்விடயம் தொடர்பில் நான்கு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய 18 ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளில் காணப்படுவதுடன் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் கூடி இறுதித் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4