யாழ். பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா - 2ம் நாள்

#SriLanka #Jaffna #யாழ்ப்பாணம்
யாழ். பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா - 2ம் நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், எட்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன், இந்த விழாவிற்கு தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கி வருகிறார்

 இந்தப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறுகிறது.

 இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, வீதிப் போக்குவரத்தை ஒருவழிப் பாதையாக மாற்றுவது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

நேற்று முதல் நாளை வரையில், காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தியை நோக்கிய ஆடியபாதம் வீதியின் தொடருந்து கடவை வரையான பாதை மற்றும் கலட்டிச் சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச் சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழிப்பாதையாகப் பேணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4