குதிரைவாலி பொங்கல் செய்வது எப்படி?
#India
#Recipe
#Cooking
#Pongal
#Tamilnews
#Sweets
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 1 கப் குதிரை வாலி அரிசி
- 1/4 கப் பாசி பருப்பு
- 1Tbsp மிளகு
- 1 Tbsp சீரகம்
- முந்திரி சிறிது
- 2 Tbsp நெய்
- 1 சிறிய துண்டு இஞ்சி
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கடாயை அடுப்பில் அதில் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் குதிரைவாலி அரிசியைக் இரண்டு முறை தண்ணீர் வைத்து களைந்து கொள்ளவும்.
- பின் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் குதிரை வாலி, வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பின மூன்று கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
- பின் குக்கர் பிரஷர் இறங்கியதும் திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி மற்றும் பருப்பைக் கரண்டியால் இலேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்குத் தேவையான அளவிற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
- பின்னர் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், மிளகு, சீரகம், முந்திரி போட்டுச் சிவக்க வறுக்கவும். அதன் பிறகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துப் பொங்கலில் சேர்க்கவும்.