மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

#SriLanka #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த இரண்டு வகை மயக்க மருந்துகளும் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

 தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது எனவும், அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக எப்போதும் தரத்திற்கு அமையவே மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4