அதிகாரப்பகிர்வு: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Meeting #Ranil wickremesinghe #srilankan politics
Mayoorikka
2 years ago
அதிகாரப்பகிர்வு: அனைத்து கட்சிக் கூட்டத்தை  கூட்ட நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பிய நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளார். 

 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வையும் அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4