க.பொ.த பரீட்சைகள் தொடர்பில் தெரிவுக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள்!

#SriLanka #Examination
Prathees
2 years ago
க.பொ.த பரீட்சைகள் தொடர்பில்  தெரிவுக்குழு  முன்வைத்துள்ள பரிந்துரைகள்!

க.பொ.த பொதுத்தேர்வை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

 பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

 அந்தக் குழுவின் தலைவர் நீதி அமைச்சர் திரு.விஜேதாச ராஜபக்ஷ நேற்று (21) பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

 இது தொடர்பான அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முன்வைக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

 அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு பதிலாக சுயாதீன உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபிக்க உயர்கல்வி அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4