இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

#SriLanka #Ali Sabri #Lanka4 #money
Kanimoli
2 years ago
இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ந் தேதி இந்தியா வந்தார். 

இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பரஸ்பர நன்மை பயக்கும் வழிகள் இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து விரிவாக பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:- இரு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்தகட்டத்தை அடைய, எங்களுக்கு முதலீடுகள் தேவை. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளை நாங்கள் விவாதித்தோம். இரு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமன்றி தனியார் துறைகளுக்கு இடையிலான உறவும் வலியுறுத்தப்பட்டன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4