கிரிகெட் போட்டியை காண ஹோட்டல் அறைகளுக்கு பதிலாக மருத்துவமனை அறைகளை முன்பதிவு செய்த ரசிகர்கள்!

#world_news #Hotel #Lanka4 #Cricket
Thamilini
2 years ago
கிரிகெட் போட்டியை காண ஹோட்டல் அறைகளுக்கு பதிலாக மருத்துவமனை அறைகளை முன்பதிவு செய்த ரசிகர்கள்!

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியை காண்பதற்கு இரசிகர்கள் ஹோட்டல் அறைகளுக்கு பதிலாக வைத்தியசாலை அறைகளை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்கு மேற்படி ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 

அங்கு ஹோட்டல் அறையொன்றின் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  

எனவே, அகமதாபாத்தில் மருத்துவமனை அறைகளை முன்பதிவு செய்ய விளையாட்டு ரசிகர்கள் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு மருத்துவமனை அறைக்கு 25,000 முதல் 30,000 இந்திய ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  கட்டணத்தில் முழு சுகாதார பரிசோதனையும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4