கிழக்கு மாகாண ஆளுநருக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

#SriLanka #Susil Premajayantha #Lanka4
Kanimoli
2 years ago
கிழக்கு மாகாண ஆளுநருக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பலமுறை கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

 அதன் அடிப்படையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

 கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4