இலங்கையில் நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில்  நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நீரிழ் மூழ்கி உயிரிழப்புகளின் எண்ணிக்கை அண்மை காலங்களில அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக நீர் மூழ்கி தடுப்பு தினம் இன்று (25.07) அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்கள் நிபுணர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது எனவும் இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனவும், 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நீரில் மூழ்கி பலியாகுவது அதிகரித்துள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

உலகில் வருடாந்தம் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், நீரில் மூழ்கும் நபரை முறையான பயிற்சியின்றி கைகளால் பிடித்து இழுக்கக்கூடாது எனவும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4