மூன்று வயது குழந்தை மீது சுடுநீர் ஊற்றிய தந்தை கைது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மூன்று வயது குழந்தை மீது சுடுநீர் ஊற்றிய தந்தை கைது!

அட்டன் - தலவாக்கலை பகுதியில் மூன்று வயது குழந்தையின் மீது சுடுநீர் ஊற்றிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் மதுபோதையில் வீட்டிற்கு வந்தநிலையில், தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதன்போது மூன்று வயது மகன் மீது சுடுநீரை ஊற்றியதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் அவரை நாளைய தினம் (26.07) நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4