பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணிலிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன

#SriLanka #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணிலிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன

பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பராமரிப்புக்கு செல்லும் தொகையும், சம்பளமும் மிச்சமாகும் என்றார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே நாட்டை மீட்டெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

 எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் அதன் பின்னர் இலங்கை படிப்படியாக கடன் வாங்கும் நாடாக இல்லாமல் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4