சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!

புல்மோட்டை கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 04 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோத வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் புல்மோட்டை, நிலாவெளி மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 18 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4