தாயின் இரண்டாம் கணவரால் சிறுமி துஷ்பிரயோகம்: யாழில் சம்பவம்
#SriLanka
Mayoorikka
2 years ago
தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவமொன்று கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாவது கணவருடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே