ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடப்பாண்டுக்கான 5 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. மான்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 317 எடுத்தது, இதுபோன்று பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிஸில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் கடைசி நாளில் மழை பெய்து இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட விடமால் ஆஸ்திரேலியாவை காப்பாற்றி விட்டது. அத்துடன் ஆஷஸ் கோப்பையையும் ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது. இதனால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து கடைசி டெஸ்டில் களம் இறங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது. லண்டன் ஓவலில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.