யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள விஷமிகள்

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4 #Church
Kanimoli
2 years ago
யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள விஷமிகள்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளது. 

 ஆனைக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

 அதில் 2 இடங்களில் சொரூபங்களின் தலைகள் உட்பட சொரூபங்கள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன , மேலும் இரண்டு இடங்களில் சொரூபங்கள் பகுதிகளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. மற்றைய இடங்களில் சொரூபங்கள் வைத்திருந்த கண்ணாடி கூடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 

 குறித்த சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

images/content-image/1690533877.jpgimages/content-image/1690533895.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4