இன்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.240 குறைந்தது

#India #Gold #Chennai
Mani
1 year ago
இன்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னை:

கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை, தற்போது ஒரு கிராம் ரூ.30-ம், பவுன் ரூ. 240-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ.5,550-க்கும், பவுன் ரூ.44,400-க்கும் விற்பனை ஆகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சிறிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று கிராம் ரூ. 81.50-க்கு விற்பனையான வெள்ளி இன்று ரூ.79.50 ஆகவும், கிலோ ரூ. 81,500-ல் இருந்து ரூ.79,500 ஆகவும் குறைந்து விற்கப்படுகிறது.