ருசியான அவரைக்காய் குருமா ஒருமுறை இப்படி வித்தியாசமாக செய்து பாருங்கள்!
#India
#Recipe
#Cooking
#Food
#Tamilnews
#Tamil Food
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவரைக்காய் நறுக்கியது
- 1 வெங்காயம்
- 3 ஸ்பூன் தேங்காய்த்துருவல்
- 1 ஸ்பூன் கசகசா
- 10 முந்திரி
- 2 மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- கறிவேப்பில்லை
- 1/2 ஸ்பூன் சோம்பு
செய்முறை:
- கசகசாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும் பின்பு முந்திரி கசகசாவை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒருமிக்ஸி ஜாரில் முந்திரி கசகசா தேங்காய் துருவல் மிளகாய் சேர்த்து அரைக்கவும் சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
- சோம்பு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் உப்பு போடவும் சிறிது வெந்ததும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
- அரைத்தமசாலாவையும் சேர்த்து வேகவிடவும் உப்பு சேர்க்கவும் .நன்கு கொதித்த பின் இறக்கினால் அவரைக்காய் குருமா ரெடி.