கிருஷ்ணகிரி வெடி விபத்து; உயிரிழப்பு 9 ஆக உயர்வு!
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை அருகே இன்று காலை பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த பட்டாசு குடோனில் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வெடிவிபத்தால் அப்பகுதியில் கரும்புகை பரவியது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த சுமார் 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்பே பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான பட்டாசு குடோன் முறையான அனுமதி பெற்றுதான் செயல்பட்டு வந்ததாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.