இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டளவியல் திணைக்களம் இன்றைய (31.07) வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில்,  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனக் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” எனவும் எதிர்வுக்கூறியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4