கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும்! வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

#SriLanka #Vavuniya #Protest
Mayoorikka
2 years ago
கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும்! வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

 கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

 ஆர்பாட்டத்தில ஈடுபட்டோர் வடக்கு கிழக்கில் நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தியதுடன், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வொன்றை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்ற பிரகடனத்தை முன்வைத்தனர். 

 அத்துடன் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், கௌரவமான உரிமைகளுக்கான மக்களின் குரல், வடக்கு கிழக்கில் அதிகார பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4