யாழ். மானிப்பாயில் சட்டவிரோதமாக கடலாமைகளைக் கடத்தியோர் பிடிபட்டனர்

#SriLanka #Jaffna #Police #Lanka4 #இலங்கை #பொலிஸ் #லங்கா4 #யாழ்ப்பாணம் #turtle
யாழ். மானிப்பாயில் சட்டவிரோதமாக கடலாமைகளைக் கடத்தியோர் பிடிபட்டனர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் நகரில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகள் கடத்தி கொண்டு பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்ற போது மானிப்பாய் பொலிசாரால் இன்று காலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் நகர் பகுதியில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வேளை மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பொலிசார் பட்டா ரக வாகனமொன்றை வழிமறித்து சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளை சோதனையிட்டனர்.

 இதன்போது 4 கடலாமைகளை உயிருடன் பொலிசார் கைப்பற்றினர். இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதிகளை சேர்ந்த இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிசாரல் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலாமைகள குருநகர் பகுதிக்கு விற்க கொண்டு சென்றுள்ளதாக  தெரியவந்துள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4