இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம்!

#SriLanka #weather #Food #Tamil Food
Mayoorikka
2 years ago
இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம்!

இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை காரணமாக தற்போதுள்ள கையிருப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது.

 இதன்காரணமாக விலங்கு உணவுகளிற்கு அரிசியை பயன்படுத்துவதை தடை செய்ய அமைச்சு தெரிவித்துள்ளது.

 சீரற்ற காலநிலை காரணமாக நெல்விளைச்சல் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது தங்கள் வயல்களிற்கான போதிய நீர் இன்மையால் விவசாயிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

 குறிப்பாக உடவலவ நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

 உடவலவபகுதியில் 75000 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது இதில் 65000ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது.

 யால பருவத்திற்கான அறுவடை விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் குறிப்பிட்டநெல்வயல்கள் போதிய நீரை பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4