ஐந்து மாவட்டங்களுக்கு நான்கு மணித்தியால மின்வெட்டு!

#SriLanka #Power #power cuts
Mayoorikka
2 years ago
ஐந்து மாவட்டங்களுக்கு நான்கு மணித்தியால மின்வெட்டு!

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால், அன்றைய தினம் முதல் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்கிறார். அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 இதன்படி, மின்வெட்டு இன்றி திறந்துவிடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என மின்சாரம் மற்றும் விவசாய அமைச்சர்   மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

 அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4