அஸ்வசும நலன்புரி திட்டம் இல்லாதவர்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு

#SriLanka #people #Lanka4 #Shehan Semasinghe
Kanimoli
2 years ago
அஸ்வசும நலன்புரி திட்டம் இல்லாதவர்களுக்கு  சமுர்த்தி கொடுப்பனவு

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை முடியும் வரை இந்த சமுர்த்தி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 தற்போது 1,792,265 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும், அதில் 946,612 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர் அந்த இலக்கை எட்ட முடியும் எனவும் சேமசிங்க மேலும் தெரிவித்தார். 

 இதேவேளை, உதவி பெறும் முதியோர், சிறுநீரகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உரிய பணம் முன்பு வழங்கப்பட்ட முறையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி முதியோர் கொடுப்பனவுகளை தபால் நிலையங்கள் ஊடாகவும், சிறுநீரக மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையங்களில் உள்ள 11,660 பேருக்கும் பழையபடி உதவித்தொகை வழங்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4