காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #Death #Health #Fever
Mayoorikka
2 years ago
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 46 வயதுடைய உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சிஎனும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த சில நாட்களாக காய்ச்சல்ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சலின் தீவிர தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

 இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4