கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை!

#SriLanka #Hospital #NuwaraEliya #Eye
Prathees
2 years ago
கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை!

கண் சத்திரசிகிச்சைக்கு பின் பயன்படுத்தப்பட்ட இந்திய மருந்தினால் நோயாளர்கள் பார்வை குறைப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில், இது குறித்து ஆராய 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

குறித்த குழு இந்த விடயம் குறித்து ஆராய்ந்து சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குழு உறுப்பினரும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருமான ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். 

இந்த 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று (01.08) நுவெரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன தலைமையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த குழுவானது, கண்சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்ட சகல நோயாளர்களுடனும் கலந்துரையாடி அவர்களை மேலதிக சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த மருந்தின் காரணமாக நுவெரியா  மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 15 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண் சிகிச்சை பெற்ற 25 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று சிக்கல்களால் கண்பார்வை பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, கூடுதல் பரிசோதனைகளுக்கு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி, அவர்களின் கண்களில் உள்ள சிக்கல்களின் அளவைக் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு அனுப்பும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4