யாழ். சங்கானையைச் சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

#SriLanka #Jaffna #Arrest #Lanka4 #இலங்கை #கைது #தம்பதி #couple #லங்கா4 #யாழ்ப்பாணம்
யாழ். சங்கானையைச் சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற வேளை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

 யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த யுவதியை சோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் போலி இத்தாலி  விசா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இத்தம்பதியினரை மேலதிக விசாரணை செய்யும் நோக்குடன் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4