ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

#SriLanka #Suicide
Prathees
2 years ago
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

 துசித சம்பத் பண்டார என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலி பிரதேசத்தில் உள்ள தனது பணியிடத்திலிருந்து எப்பாவலவில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் நேற்று (02) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 அப்போது வீட்டில் யாரும் இல்லை. மதியம் 12 மணியளவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 காலி பிரதேசத்தைச் சேர்ந்த தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 அதன்படி அந்த குடும்பத்தில் ஐந்தாவது நபராக தற்கொலை செய்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சகோதர சகோதரி ஒருவர், தலாவ பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட அதே தோட்டத்தில் இன்னொரு சகோதரனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 மேலும் இந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் அவரது சகோதரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.

 அதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளில் ஐந்து பேர் அவ்வப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4