ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டம்

#SriLanka #Export #Lanka4 #Tea
Kanimoli
2 years ago
ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டம்

ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

 இந்த திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் முறை மூலம் உலக தேயிலை சந்தையுடன் பரிவர்த்தனைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

 ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை இழந்த ஈரானிய தேயிலை சந்தையை மீளப்பெற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4