அரியாகம பகுதியில் லொறியொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்து - நால்வர் பலி!

#SriLanka #Death #Accident #Lanka4
Thamilini
2 years ago
அரியாகம பகுதியில் லொறியொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்து - நால்வர் பலி!

தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (04.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4