யாழில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Death #Police #Lanka4
Thamilini
2 years ago
யாழில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

நேற்று (03) பிற்பகல் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையொன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

இவர் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தங்கியிருந்த இவர், மன்னார் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

காதல் முறிவு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4