யாழில் போதைப்பொருளுடன் கைதான பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி! கணவன் செய்த காரியம்

#SriLanka #Jaffna #Arrest #drugs
Mayoorikka
2 years ago
யாழில் போதைப்பொருளுடன் கைதான பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி! கணவன் செய்த காரியம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த நகைக்கடை உரிமையாளரான கணவர் போதைப் பொருளுடன் கைதான மனைவி மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட போது பொலிசார் தாக்குதலை நிறுத்தியதோடு கணவரையும் கைது செய்துள்ளனர்.

 யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயது டைய பெண் ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 80மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4