தித்திக்கும் தஞ்சாவூர் புட்டு பாயசம் இப்படி செய்து பாருங்க!

#India #Health #Healthy #Cooking #Food #Tamilnews #Sweets #How_to_make #Tamil Food
Mani
8 months ago
தித்திக்கும் தஞ்சாவூர் புட்டு பாயசம் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • 1/2 கப் கடலை பருப்பு
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 3/4 கப் தேங்காய்த் துருவல்
  • 1 கப் பொடித்த வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சுக்கு பொடி
  • 11/2 அல்லது 2 கப் புட்டு மாவு
  • நெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
  • புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்து பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.
  • புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
  • தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.