பல்லேகம மயானத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பல்லேகம மயானத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

தம்புள்ளை பல்லேகம மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த அறிவித்தலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​இவர் கித்துல்ஹிதியாவ, மடடுவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனை இன்று (05.08) நடைபெறவுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, நெலுவ, லெலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

72 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4