அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த தீர்மானம்!

#SriLanka #Keheliya Rambukwella #drugs #Lanka4
Thamilini
2 years ago
அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த தீர்மானம்!

எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரம் அவசர கொள்வனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் குறைபாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட அவர், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்குள் இருந்த பிரச்சினைகள் தற்போது முற்றாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4