காங்கேசன்துறை தொழிற்சாலையில் திருடிய மூன்று பெண்கள் கைது!

#SriLanka #Arrest #Kangesanthurai
Mayoorikka
2 years ago
காங்கேசன்துறை தொழிற்சாலையில் திருடிய  மூன்று  பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 காங்கேசன்துறை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

சம்பவ தினத்தன்று குறித்த சீமெந்து தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த 20 பேர் கொண்ட கும்பலானது அங்கு திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அங்கு விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை அனைவரையும் கைது செய்துள்ளனர்.

 இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 இதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4