வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 90 ஆயிரம் மக்கள் : யாழ்ப்பாணத்திற்கே அதிக பாதிப்பு!

#SriLanka #Jaffna #Lanka4
Thamilini
2 years ago
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 90 ஆயிரம் மக்கள் : யாழ்ப்பாணத்திற்கே அதிக பாதிப்பு!

வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் கிட்டத்தட்ட 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. 

27,885 குடும்பங்களைச் சேர்ந்த 89,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

யாழ்.மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,098 குடும்பங்களைச் சேர்ந்த 5,734 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,726 குடும்பங்களைச் சேர்ந்த 5,655 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,747 குடும்பங்களைச் சேர்ந்த 8,983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4