நாமல் குமாரவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
நாமல் குமாரவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவர் கைது

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட தந்தை முப்பத்தைந்து வயதான வர்த்தகர் மற்றும் அவரது இருபத்தி மூன்று வயது மகன் கூலி தொழிலாளி. நாமல் குமாரவின் மனைவி மதுவந்தி திலகரத்ன செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கரத விகாரைக்கு அருகில் நபர் ஒருவருடன் நாமல் குமார வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 அப்போது தகராறு நடந்த இடத்திற்கு வந்து தந்தையும், மகனும் எங்கள் மக்களை தொந்தரவு செய்கிறீர்களா என்று கேட்டதாக பொலிசார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த நாமல் குமார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தடியடி, கை, கால்களால் தாக்கப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4