இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேமிக்கும் நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

கிளிநொச்சியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேமிக்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று (07-08-2023) கரைச்சி பிரதேச சபையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது சுற்றாடல் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இலத்திரணியல் கழிவுகளை முறையாக சேகரிக்கும் ஒரு வார கால நிகழ்ச்சி திட்டம் இன்று வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதன் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றுள்ளது நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் பி பத்மகரன் உள்ளூராட்சி உதவியாளையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மணிமேகலை
மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாணத்திற்கான பணிப்பாளர் மகேஸ் ஜல்தோட்ட மற்றும் துறை சார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு கொண்டிருந்த இந்த நிகழ்வில் இலத்திரணியல் கழிவுகள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன் இலத்திரணியல் கழிவுகளை சேகரிப்பதற்கு அடையாளமாக பயன் தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன-



