உருளைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி?

#India #Tamil Nadu #Tamil People #Recipe #Cooking #Food #Tamilnews #Tamil Food
Mani
1 year ago
உருளைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 4 உருளைக்கிழங்கு நீள வாக்கில் நறுக்கியது
  • 4 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் சீரக பொடி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • களர் பொடி தேவைப்பட்டால்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • கருவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:

  • முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும், பிறகு அதனை தண்ணீரால் கழுவி வெள்ளை துனில் போட்டு ஈரமில்லாமல் துடைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் கான்ப்ளவர் மாவு, சிக்கன் மசாலா, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரக தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வெந்ததும் கடைசியாக எண்ணெயில் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் அதில் கொட்டவும்.
  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பகோடா தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!