பிரான்ஸின் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

#Death #France #Lanka4 #இளைஞன் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸின் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Hérault இலிருக்கும் Cap d'Agde நகரத்தில் அமைந்துள்ள பொழுதுபோக்குக் கேளிக்கைப் பூங்காவான Luna Park இல் கொடூர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவிற்குச் சற்றுப் பின்னர் 00h30 அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு மேலிருந்து கீழாக ஒரு இரப்பர் இழுவை நாடாவில் தொங்கும் ஊஞ்சலில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 17 வயது இளைஞன், இந்த நாடாவைத் தாங்கி நிற்கும் பெரும் இரும்புத் தூனில் மோதி, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். 

இதில் சென்ற மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சாகச விளையாட்டடில் ஈடுபடுபவர்கள், மேலிருந்து கீழாக மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் வீழ்ந்து மீண்டும் மேலிழுத்துச் செல்லப்படுவார்கள்.

 ஆனால் இங்கு மோசமான காற்று மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வீசிய சமயத்தில் இந்த விளையாட்டில் ஈடுபட்டமையாலேயே, இந்த விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. புயற்காற்று வீசும் போதும் இந்த விளையாட்டுக்களை அனுமதித்த பூங்கா மீது விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4