இலங்கையில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

#SriLanka #Sri Lanka President #weather #hot
Mayoorikka
2 years ago
இலங்கையில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 90ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 அதன் பிரகாரம் சப்பரகமுவ, கிழக்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களுக்குரிய 18 பிரதேச செயலக தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 27ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89ஆயிரத்து 485 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

 யாழ். மாவட்டத்தில் 5பிரதேச செயலக தொகுதிகளில் 21ஆயிரத்தி 714 குடும்பங்களைச்சேர்ந்த 69ஆயிரத்து113பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 734 பேரும் வடமேல் மாகாணத்தில் ஆயிரத்து 726 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 655 பேரும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 747 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4